எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் 4 வயது சிறுமி சாவு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தாள்.திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் தர்ஷிணி(வயது 4). இவள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இந்நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தாள்.உயிரிழந்த சிறுமி சில தினங்களுக்கு முன்பு குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டதாகவும், அதற்கு பிறகு தான் சிறுமி தர்ஷிணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
குடற்புழு மாத்திரை உயிரிழந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக வலிப்பு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் வலிப்பும், மயக்கமும் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போதே சிறுமி மயக்கத்தில் தான் இருந்தாள். இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. உடல்நலக் குறைபாடு ஏற்படுவதற்கு முன்பாக சிறுமி குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டதாக கூறப்படுகிறது.சிறுமி தர்ஷிணிக்கு நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட தொற்று காரணத்தால் தான் மயக்கத்திலே நீண்ட நாட்களாக இருந்தாள். மேலும் அவளுக்கு வலிப்பு நோய் இருந்ததால் அவளது உடல் நிலை மிகவும் மோசமானது.பேச்சுவார்த்தை இந்த நிலையில் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி உயிரிழந்து விட்டாள்.
என்று கூறினார்.பின்னர் சிறுமி தர்ஷிணியின் உறவினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *