ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 11.4% சரிவு

Comments (0) இந்தியா

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

beef-exportஏப்ரல் மாதத்தில், நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதி, 11.4% சரிவை சந்தித்துள்ளதாக, தெரியவந்துள்ளது.இந்திய அளவில் மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாட்டிறைச்சி ஏற்றுமதி வழக்கம்போல தொடரும் என கூறப்படுகிறது.எனினும், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இயங்கும் மாட்டிறைச்சி ஏற்றுமதி கூடங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாட்டிறைச்சி தொழிலில் முஸ்லீம் மக்களே அதிகம் ஈடுபட்டுள்ளனர்.அவர்களை குறிவைத்து, வட இந்திய மாநிலங்களில் தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இது முஸ்லீம் மாட்டு வியாபாரிகள், இறைச்சி ஏற்றுமதியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், உரிய அனுமதியின்றி இயங்கும் மாட்டிறைச்சி தொழிற்கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மாட்டிறைச்சி ஏற்றுமதியில், 11.4% சரிவு நிகழ்ந்துள்ளது. இதன்படி, சென்ற 2016ம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட மாட்டிறைச்சி ஏற்றுமதி தற்போதைய ஏப்ரல் மாதத்தில் 86,119 டன்களாகக் குறைந்துள்ளது.மாட்டிறைச்சி விவகாரத்தில் மோடி அரசு குறுகிய கண்ணோட்டம் கொண்டிராமல், விதிமுறைகளை தளர்த்தினால் மட்டுமே, இதுசார்ந்த தொழில்களின் வளர்ச்சி மேம்படும். அத்துடன், இந்தியாவின் அந்நிய செலவாணி மதிப்பும் உயரும் என, மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.சென்ற மார்ச்சுடன் முடிவடைந்த 2016 முழு நிதியாண்டில், நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதி ரூ.21,000 கோடி மதிப்புடையதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *