ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்தியது.
8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டெர்பியில் இன்று நடந்த 14–வது லீக்கில் இந்தியாவும், இலங்கையும் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக ஆடிய இந்திய அணி வீராங்கனைகள் நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தனர்.அடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாடிய இலங்கை அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருது 78 ரன்கள் எடுத்த இந்தியாவின் தீப்தி ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *