ஐ.நா. சபையின் விருதை வென்ற மம்தாவின் குழந்தைகள் நலதிட்டம்

Comments (0) இந்தியா, உலகம், கல்வி, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் பெண்கள் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு ஐ.நா. சபையின் உயரிய விருது கிடைத்துள்ளது.ஐநா சபையின் பொதுச் சேவை அமைப்பு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதை மேற்கு வங்க மாநிலத்தின் பெண் குழந்தைகள் நலத்திட்டமான கன்யாஸ்ரீ பிரகல்பா என்ற திட்டத்திற்குக் கிடைத்துள்ளது.மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் இத்திட்டம் மூலம் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக குறிப்பிட்ட தொகை ஆண்டுதோறும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை ரூ.3,200 கோடி இத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஆயிரம் பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் படிக்கும் 40 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.62 நாடுகளைச் சேர்ந்த 522 திட்டங்கள் ஐநா பொதுச்சேவை அமைப்பில் சிறந்த திட்டத்திற்கான விருதைப் பெற விண்ணப்பி த்திருந்தன. அவற்றில் மிகச்சிறந்த திட்டமாக மம்தா அரசின் இத்திட்டம் முதல் பரிசை பெற்றிருக்கிறது.
இதற்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விருதக் கேடயத்தைப் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த விருது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை என்றும் இதனால் இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமை கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் நிலையான வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *