ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடும் அனுஷ்கா

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு உடல் எடை காரணமாக பெரும்பாலான படங்களில் கமிட் ஆகவில்லை. குறிப்பாக தமிழ் படங்களில் ஒப்பந்தமாகவில்லை. `இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடை கூட்டி நடித்ததால், பாகுபலி 2 படத்தில் உடல் எடை குறைக்கமுடியாமல் ராஜமௌலிக்கும் அனுஷ்காவுக்கும் இடையே மனவருத்தமும் ஏற்பட்டது. அதனால் தற்போது உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு யோகா பயிற்சியின் மூலம் குறைத்து வருகிறார். பெரும்பாலான நடிகைகள் நடிக்கும் வாய்ப்பு குறையும் போதுதான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வருவார்கள் ஆனால், முன்னணி நடிகையான அனுஷ்காவோ ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்துள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸின் `ஸ்பைடர்’ படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கும் படம் `பாரத் எனே நேனு’. இப்படத்தில் முதல் மந்திரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாட கேட்கப்பட்ட போது சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *