ஒரே நாளில் மோதும் குரு – சிஷ்யன்!

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயக்குநர் மற்றும் நடிகருமான சசிகுமார் சென்ற வருடம் வெளியான “பலே வெள்ளையத் தேவா” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் சார்பில் ‘கொடிவீரன்’ திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார். சசிகுமார், மஹிமா நம்பியார், விதார்த் போன்ற முக்கிய கதாப்பாத்திரங்கள் நடித்து வரும் “கொடி வீரன்” திரைப்படத்தை, மருது – கொம்பன் படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.சசிகுமாரின் கொடி வீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன் டிவிட்டர் பக்கத்தில் இன்று(3-08-2017) வெளியிட்டார். கிராமத்து கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் சசிகுமார், அந்த பாணியில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளார். அந்த வகையில் கொடி வீரன் திரைப்படமும் கிராமத்துக் கதைக் களத்தில், காதல் – ஆக்‌ஷன் நிறைந்த திரைப்படமாக வரும் என்பதை இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்க்கும்போதே தெரிகிறது. கொடி வீரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொழில்நுட்ப ரீதியில் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, வழக்கமான சசிகுமாரின் கிராமத்துப் படங்களில் இருக்கும் கதாபாத்திரத்தின் சாயலை நாம் காணலாம். சசிகுமார், இயக்குநர் பாலாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது ஏற்கனவே அறிந்தது. அவ்வகையில் இன்று(3-8-2017) நாச்சியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பாலா வெளியிட்டுள்ளார். குருவும் சிஷ்யனும் ஒரே நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக்கில் வந்திருக்கின்றனர்.எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் என்.ஆர் ரகுநந்தன் இசையில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இவர்கள் கூட்டணி 2013 ல் வெளியான குட்டி புலி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • jyothika-naachiyaar-gv-prakash_640x480_61501738530
  • 1501765175a
  • 1501765175b
  • bala
  • jothika

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *