ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம் – 3 ஓட்டுநர்களுக்கு தர்மஅடி

Comments (0) தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

46020185சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர், பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறதுஅப்போது, நாராணம்பாளையத்துக்கு செல்ல விரும்பிய சிறுமி, ஓமலூர் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் மூன்று ஓட்டுநர்களை தவிர வேறு யாரும் இல்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் பேருந்தில் இருந்த 3 ஓட்டுநர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். நாராயணம்பாளையம் வந்தவுடன், பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே பேருந்திலிருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஊர் மக்கள், சிறுமியை அழைத்து விசாரித்தபோது, பேருந்தில் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.இதையடுத்து, பேருந்தை மறித்த பொதுமக்கள், மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகிய 3 ஓட்டுனர்களையும் அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *