ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் சட்டசபையில் தி.மு.க.வினர் அமளி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்தார். இதை பற்றி பேச அனுமதி தராததால் யில் ஈடுபட்டனர்.சட்டசபையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் மானிய கோரிக்கை நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினார்.இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக விளக்கமாக பதில் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசியது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தார்.சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சினையை தி.மு.க. எழுப்பியது.மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் இன்று சட்டசபைக்கு வராததால் தி.மு.க. கொறடா சக்கரபாணி இது தொடர்பாக பிரச்சினை எழுப்பினார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.வெளியில் பேசுவதையெல்லாம் இங்கு விவாதிக்க முடியாது. வெளியில் பேசுவதற்கு நீங்கள் வெளியிலேயே பதில் சொல்லுங்கள் என்று கூறினார். ஆனால் இதை ஏற்காமல் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து பேச வாய்ப்பு கேட்டனர்.இதனால் சபையில் கூச்சல்-குழப்பம், அமளி ஏற்பட்டது. சபாநாயகர் அனைவரையும் இருக்கையில் உட்காரும்படி பலமுறை தெரிவித்தார். ஆனாலும் தி.மு.க.வினர் உட்காராமல் வாய்ப்பு கேட்ட னர். உடனே சபாநாயகர், “நீங்கள் 1 மணி நேரம் நின்று கொண்டு பிரச்சினை செய்தாலும் பேச அனுமதி தர முடியாது. உங்கள் உறுப்பினர் கே.என.நேரு வேறு பிரச்சினை தொடர்பாக பேச அனுமதி கேட்டுள்ளார். அவரை பேச அனுமதிக்கப் போகிறீர்களா? இல்லையா? என்று கேட்டார்.
அதன்பிறகு தி.மு.க.வினர் இருக்கையில் அமர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *