கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பாயேவுடன், பிரதமர் மோடி சந்திப்பு

Comments (0) அரசியல், இந்தியா, உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் நூர்சுல்தான் நஸர்பாயேவை சந்தித்துப் பேசினார்.மத்தியக் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்து prime-minister-narendra-modi-with-kazakhstan-president-nursultan-nazarbayev-14363514447032வதற்காக சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பில் தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும் உறுப்பினர்களாக இணைகின்றன. இந்நிலையில் வியாழன் மற்றும் வெள்ளிகிழமை கஜகஸ்தானில் நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதனை முன்னிட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பாயேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். கஜகஸ்தானில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றிலும் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *