கதிராமங்கலம் போராட்டம் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கோட்டை முற்றுகை: வேல்முருகன்-ஜவாஹிருல்லா

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கதிராமங்கலம் விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.கதிராமங்கலம் விவசாயிகள் போராட்டம் குறித்து பூவுலகின் நண்பர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), மல்லை சத்யா (ம.தி.மு.க.), வன்னியரசு (விடுதலை சிறுத்தை), உதயகுமார் (பச்சை தமிழகம்) ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-கதிராமங்கலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க போலீசார் எடுத்த நடவடிக்கை கண்டிக்கதக்கது. 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனை வாபஸ் பெற வேண்டும். கதிராமங்கலம் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அங்கு ஓ.என்.ஜி.சி. பணிகள் செய்வதை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும்.தமிழகத்தை பாலைவனமாக ஆக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் கண் பார்வையிலேயே தமிழக அரசு செயல்படுகிறது.சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசும்போது. விவசாயிகள் வன்முறையை தூண்டியதால் தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக பொய்யான தகவல்களை கூறியுள்ளார். போலீசார் திட்டமிட்டு தாக்கியுள்ளனர்.பெண்கள் மீதும் காவல்துறை தாக்கியுள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை அரசு கொடுத்து வருகிறது.அதனால் அரசு விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் அடுத்ததாக வலுவான போராட்டம் தொடரும்.தலைமை செயலகம், முதல்வர் வீடு மற்றும் பா.ஜனதா அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *