கத்தார் வாழ் இந்தியரை காப்பாற்றுக- வைகோ பிரதமருக்கு கடிதம்

Comments (0) இந்தியா, தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

vaikoo_0கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதி யுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எழுதியுள்ள கடிதத்தில், சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக் கொண்டதைத் தொடர்ந்து, கிழக்கு லிபிய அரசும், மாலத்தீவு ஆகிய நாடுகளும் அதே முடிவை மேற்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.ஏமன் நாட்டில் நடைபெறும் போரில், சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளில் இடம்பெற்று இருந்த கத்தார் படையினரை சவூதி அரேபியா அரசு விலக்கி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடன் போக்குவரத்து தொடர்புகளை அறவே நிறுத்திக்கொண்டதாகவும், இதனால், வனூர்திக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.நிலைமை எல்லைமீறிச் செல்லுமானால், கத்தார் நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நலன்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை தூதரக உறவுகள் மூலம் பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த இக்கட்டான சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமை யிலான அரசு மிகுந்த கவனத்தோடும், பொறுப்போடும் செயல் படும் என தாம் நம்புவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *