கமலின் “பிக் பாஸ் நிகழ்ச்சி”…!ரசிகர்கள் மிகவும் ஆர்வம்,

Comments (0) கலை, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.உலக நாயகன் கமல்ஹாசன் முதன் முதலாக தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக் பாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியை மிகவும் பிரபல நடிகர் தொகுத்து வழங்குகிறார் என்பதால் விஐபிகள் மற்றும்ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.முதன் முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சி இன்று (25ம் தேதி) துவங்குகிறது. விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. துவக்க நிகழ்ச்சியுடன் துவங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு

 • 59308388
 • kamal
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தினந்தோறும் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக சென்னையின் புறநகரில் உள்ள ஈவிபி தீம் பார்க்கில் ரூ. 100 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும், பிரபலங்களின் பட்டியலை வெளியிட கமல்ஹாசன் மறுத்துவிட்டார். இந்நிலையில், அமலா பால், சடகோபன் ரமேஷ், ராய் லட்சுமி, ராதாரவி, சஞ்சனா சிங், அமித் பார்கவ், சிம்ரன், உமா ரியாஸ், ராகவ், தாடி பாலாஜி, சஞ்சனா ஷெட்டி, ஹெச்.ராஜா, ஹேமங்பதானி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்கலாம் என்று தகவல் வெளியாகி வந்தது. இதில், ராய் லட்சுமி நான் பங்கேற்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.“பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் எலிமினேட் செய்யப்பட்டாலோ அல்லது நிகழ்ச்சி முடிந்தாலோ தான் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, பேனா, பென்சில், கடிகாரம், இணையம், பேப்பர் என்று எந்தவொரு தொலைத் தொடர்புக்கும் அனுமதி கிடையாது. கழிவறை மற்றும் குளியலறை தவிர வீட்டின் அனைத்து இடங்களிலும் 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
பிரபலங்களுக்குள் தினந்தோறும் போட்டிகள், விளையாட்டுகள் நடத்தப்படும். இவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்து மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் அவர்கள் வாரம் ஒருவராக வெளியேற்றப்படுவார்கள். இறுதி வாரத்தில் 3 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்களில் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும். இது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.பாலிவுட்டில் கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 11வது சீசனை எட்டியுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *