கமலை கண்டுக்க வேண்டாம்:எடப்பாடி பழனிசாமி திடீர் உத்தரவு!

Comments (0) அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் கமல் தொடர்பான செய்திகளும், ரியாக்‌ஷனும் வந்து விழுந்தபடியே இருந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு, ‘டிஜிட்டல் திண்ணைக்கு…’ என்ற குறிப்புடன் வந்து விழுந்தது இந்த மெசேஜ்.“’தமிழகத்தில் நடக்கும் ஊழல்களைப் பார்த்தால் மனசு வலிக்கிறது. ஊழலில் பீகாரை விட தமிழகம் முந்தி விட்டது!-இதுதான் கமல் முதலில் கொளுத்திப் போட்ட சமாச்சாரம். கமலில் இந்த டாக், அதிமுக அமைச்சர்களை டென்ஷன் ஆக்கியது. அமைச்சர்கள் ஜெயகுமார் தொடங்கி, ஒவ்வொருவரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ’அரசியல் தெரியாதவர் அரசியலைப் பற்றி பேசக் கூடாது’ என்று கொந்தளித்தார்கள். கமலுக்கு ஆதரவாக திமுக களமிறங்கியது. ‘மக்களின் எண்ணத்தைத்தான் கமல் பேசி இருக்கிறார். அவரை மிரட்டுவது ஜனநாயகத்தை மீறிய செயல்’ என ஸ்டாலின் அறிக்கை விட்டார். உடனே கமலும், ஸ்டாலினுக்கு நன்றி சொன்னார். அந்த நன்றியில், ‘அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச்செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது’ என்று குறிப்பிட்டார்.இதன் பிறகு அதிமுக அமைச்சர்கள் இன்னும் சூடானார்கள். கமலை இயக்குவது திமுக என நினைத்த அமைச்சர்கள் தொடர்ந்து கமலுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். அதில்தான் கடுப்பான கமல், நேற்று இரவு திடீரென அமைச்சர்களுக்கு எதிரான அஸ்திரத்தை கையிலெடுத்தார்.” என்று வந்து விழுந்தது மெசேஜ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘அதெல்லாம் சரி… முதல்வரும், அமைச்சர்களும் என்ன நினைக்கிறார்கள்?’ என்ற கேள்வியை கேட்டது. பதிலை அடுத்த மெசேஜ்ஜில் போட்டது வாட்ஸ் அப்.“கமல் அறிக்கை வந்ததும் நேற்று இரவே முதல்வர்

 • Jayakumar
 • Edapadi_Palanisamy_002_20165
 • JAYAKUMAR-EPS
 • 1473917651-3606.kamal
, ‘கமலுக்கு அரசியல் தெரியாது’ என்று சொன்னார். அதன் பிறகு அமைச்சர்கள் சிலருடன் பேசி இருக்கிறார். ‘அவர் ஏதோ பேசிட்டு போகட்டும். இனி அவரு பேசுறதுக்கு நீங்க யாரும் பதில் சொல்லாதீங்க. அவரு பேசுறதுக்கு எல்லாம் நாம பதில் சொல்றதாலதான் அவரு திரும்பத் திரும்ப அறிக்கை விடுறாரு. பேசிட்டு இருக்காரு. அவரை அப்படியே கண்டுக்காம விடுறதுதான் நல்லது. அவரு அரசியலுக்கு வருவதால நமக்கு எந்த நஷ்டமும் இல்லை.ரஜினி அரசியலுக்கு வராருன்னா அதுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு. இவரை எல்லாம் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க. எந்தக் கட்சிக்கு இவரு போனாலும் அதனால பெரிய வாக்கு வங்கி எதுவும் கூடிடாது. அதனால அவரை நாம கண்டுக்காம விடுறதுதான் நல்லது. நம்மை எதிர்க்கிறதால திமுகவினர் அவருக்கு ஆதரவாகப் பேசிட்டு இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு விஜயகாந்த்க்கு இருந்த செல்வாக்குல பத்து சதவீதம் கூட இவருக்கு இல்லை. பத்து பேரை ஒரு வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சு பிக் பாஸ்ன்னு சொல்லிட்டா இவரு பிக் பாஸ் ஆகிடுவாரா? நாம எல்லோரும் திரும்பத் திரும்ப அவரோட பேரைச் சொல்லி பதில் சொன்னதாலதான் இது இவ்வளவு தூரம் வந்திருக்கு…’ என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி.அதற்கு அமைச்சர் ஜெயகுமார், ‘அதுக்காக அவரு என்ன பேசினாலும் அப்படியே விட்டுடலாம்னு சொல்றீங்களா? ஏதோ இந்தியாவுலயே நாமதான் ஊழல் கட்சி என்கிற மாதிரி அவரு பேசிட்டு இருக்காரு. ஒரு கவுன்சிலருக்கு நின்னு அவரை ஜெயிக்க சொல்லுங்க பார்க்கலாம். அப்புறமா அரசியலுக்கு வரதைப் பற்றியெல்லாம் பேசட்டும். இதுநாள் வரைக்கும் இவருக்கு மக்கள் மேல என்ன அக்கறை இருந்திருக்கு. கோடி, கோடியா சம்பாதிச்சதை எல்லாம் மக்களுக்காக பத்து ரூபா செலவு பண்ணியிருப்பாரா… இவரெல்லாம் வந்து பேசுறதைத்தான் ஜீரணிக்க முடியலை…’ என்று சொன்னாராம்.நீங்க சொல்றது எனக்குப் புரியுது. அதுக்காக அவரு பேசுறதுக்கு எல்லாம் நாம பதில் சொல்றதால எதுவும் மாறிடாது. பதில் சொல்லாமல் விட்டால் ரெண்டு தடவை பேசிட்டு அவரு அடுத்த படத்துக்கோ அல்லது டி.வி. நிகழ்ச்சிக்கோ போயிடுவாரு. இங்கே இருக்கிறவங்களே தலையால தண்ணி குடிச்சிட்டு இருக்கோம். இவரு அரசியலுக்கு வந்து… விடுங்க பார்த்துக்கலாம்! நம்ம ஆட்கள்கிட்ட சொல்லி இனி அவரைப் பற்றி எதுவும் விமர்சனம் செய்ய வேண்டாம்னு சொல்லிடுங்க…’ என்று திரும்பவும் சொல்லி இருக்கிறார் முதல்வர் பழனிசாமி.” என்று முடிந்தது அந்த மெசேஜ். அதையும் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *