கமல் சமுதாய சிந்தனை இல்லாதவர்;-தமிழிசை சவுந்தரராஜன்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கமல் தனது படங்களில் சமுதாய அக்கறையுடன் நடித்தாரா? அவர் சமுதாய சிந்தனை இல்லாதவர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-ரஜினிக்கு ஆதரவும், கமலுக்கு எதிர்ப்பும் தெரிவித்ததை மறுப்பதற்கு இல்லை. தமிழக அரசியல் சூழலில் ரஜினி சமுதாய அக்கறை உள்ளவர்.
1996-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு குரல் கொடுத்தவர் ரஜினி. நதி நீர் இணைப்பு குறித்து வாஜ்பாய் தெரிவித்ததும், ரூ. 1 கோடி தருவதாக ரஜினி அறிவித்தார்.கொள்கை ரீதியாக செயல்பாடு உள்ளவர் ரஜினி. கமல் தனது படங்களில் சமுதாய அக்கறையுடன் நடித்தாரா? அவர் சமுதாய சிந்தனை இல்லாதவர்.ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரத்தில் துணிச்சலுடன் கமல் பேசவில்லை. தமிழகத்தில் பல பிரச்சினைகள் வந்த போது எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.இந்தி திணிப்புக்கு எதிராக போராடியதாக தெரிவிக்கும் கமல், இந்தி படங்களில் நடித்து இருக்க கூடாது. இந்தி படங்களில் நடித்ததன் மூலம் தான் தனது வாழ்வை வளப்படுத்திக் கொண்டார்.கமல் சுய விளம்பரம் தேடி முதல்வர் ஆகி விடலாம் என்று நினைப்பவர். அவர் அரசியலை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை.தமிழக அரசின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்தில் ஊழல் களையப்பட்டு, வளர்ச்சி பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.தமிழகத்தின் வருவாய் வளர்ச்சி குறித்தி தணிக்கைத் துறை வெளியிட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு ஒரு எச்சரிக்கையா எடுத்து கொள்ள வேண்டும். என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *