கர்நாடகாவில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் கிழிப்பு பெரும் பரபரப்பு!

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கர்நாடகாவில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் கன்னட அமைப்பினரால் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.ஆடிக்கிருத்திகையையொட்டி கர்நாடகாவில் முருகன் கோவில்களில் விழாக்கள் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. விழாவையொட்டி தமிழர்கள் தரப்பில் கர்நாடகாவில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. இவ்வாறு தமிழில் வைக்கப்பட்ட பேனர்கள் அங்கு கிழிக்கப்பட்டு உள்ளது. கன்னட அமைப்பினரால் இந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது, அப்போதும் இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். இப்போது தமிழ் மொழி பேனர்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.பேனர்களில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் மட்டும் தனியாக கிழித்து எடுக்கப்பட்டது கன்னட அமைப்பினரால்.மொழி திணிப்பு சட்டவிரோதம் என சித்தராமையா நேற்று பேசிய நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.மாநிலத்தில் காங்கிரஸ் – பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதா ஆட்சியை பிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.நேற்று சுதந்திர தின விழாவில் உரையாற்றிய சித்தராமையா பேசுகையில், பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட பன்முக சமூகத்தில் நாம் வாழ்கிறோம். இதுதான் நமது நாட்டின் வலிமை. இருந்தாலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நம்முடைய மொழி, கலாசாரங்களை பாதுகாப்பதன் மூலம் தான் நாம் வளர்கிறோம். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையாகும். ஒவ்வொரு மாநிலமும் அலுவலக மொழியை கொண்டுள்ளது. அந்த மொழியை முதன்மையாக பயன்படுத்தி கொள்ள அரசியல் சாசனம் இடம் அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் இன்னொரு மொழியை கட்டாயமாக புகுத்துவது சரியானது அல்ல. அவ்வாறு செய்வது, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு எதிரானதாகும்.கர்நாடகத்தில் கன்னட மொழி தான் முதன்மையானது. இதற்கு எதிரான அடக்குமுறையை சகித்து கொள்ள முடியாது. ஆனால், அனைத்து மொழிகளையும் கற்று கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று சித்தராமையா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *