கர்ப்பிணி போல நடித்து குழந்தையை விலைக்கு வாங்கிய பட்டதாரி பெண்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மருமகளிடம் இருந்து 4 மாத கைகுழந்தை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காதல் திருமணத்தை எதிர்த்த குடும்பத்தினரை திருப்திபடுத்த கர்ப்பிணி என்று நாடகமாடி, கடத்தல் கும்பலிடம் குழந்தையை விலைக்கு வாங்கி சிக்கிக்கொண்ட பட்டதாரி பெண்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சோமன். இவரது மகன் யோகேஸ்வரனின் மனைவி பத்மினி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற பத்மினி தனக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.குழந்தையை பார்த்த சோமன் குடும்பத்தினர், அந்த குழந்தையின் பிறப்பில் பல சந்தேகங்கள் இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பத்மினியின் தாய் வீட்டிற்கு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பத்மினியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த குழந்தை அவருடையது அல்ல என்பதும் விலைக்கு வாங்கியது என்பதும் கண்டறியப்பட்டதால் அவரிடம் இருந்து குழந்தையை மீட்டுச்செல்வதாக கூறி எடுத்துச்சென்றனர்.பத்மினியிடம் அந்த குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது என்பது தொடர்பான எந்த விவரமும் இல்லை, பிறப்புச்சான்றோ, சிகிச்சை எடுத்துக்கொண்ட எந்த ஒரு ஆவணமோ, இல்லாததால் அதனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர். பத்மினியின் பெற்றோரோ குழந்தை தங்களுடையது என்று போலீசாரிடம் வாதாடினர். குழந்தை எப்படி பிறந்தது என்பதற்கு அவர்கள் அளித்த விளக்கம் நூதனமாக இருந்தது.
சிந்தாதிரிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பத்மினியின் கர்ப்பிணி நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது தெரியவந்தது என்கிறது காவல்துறை.ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சோமனின் மகன் யோகேஸ்வரனும், பட்டதாரி பெண்ணான பத்மினியும் காதலித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டனர்.காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் உதவி ஆய்வாளர் சோமன் , தனது மகனுக்காக மருமகள் பத்மினியை ஏற்றுக்கொண்டுள்ளார். இருந்தாலும் காதல் திருமணத்தை சுட்டிக்காட்டி அடிக்கடி பிரச்சனை எழுந்தது. அப்போது ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பெரியவர்கள் ஆறுதல் சொல்ல, அதையே தனது நாடகத்துக்கான தொடக்கமாக எடுத்துக்கொண்ட பத்மினி, தான் கர்பமாக இருப்பதாக கணவர் வீட்டாரை ஏமாற்றி உள்ளார் தனது பெற்றோரின் ஒத்துழைப்புடன்..! ஒன்பதாவது மாதம் உறவினர்களை எல்லாம் அழைத்து வளைகாப்பு நடத்தி உள்ளனர். அப்போது வந்தவர்கள் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இல்லையே என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
அதற்கு தங்கள் பரம்பரைக்கே உள்வயிறு என்றும், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் வயிறு வெளியே தெரியாது என்று கூறி சமாளித்துள்ளனர். பிரசவ தேதி எப்போது என்றதற்கும் முறையான பதில் சொல்லாமல் மழுப்பிய அவரது பெற்றோர். திடீரென்று ஒரு நாள் பத்மினிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று கூறி தகவல் தெரிவித்துள்ளனர். அந்த குழந்தை 10 நாட்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை போல தொப்புள் கொடி எல்லாம் காய்ந்து இருந்ததால் சோமன் குடும்பத்தினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.கடந்த 4 மாதங்களாக குழந்தையை தனது தாய் வீட்டில் வைத்து வளர்த்து வந்த பத்மினி மீது குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சென்று விசாரித்த அதிகாரிகள் பத்மினியிடம் இருந்து குழந்தையை மீட்டு உள்ளனர்,பத்மினி, தன்னுடைய 17 சவரன் நகையை விற்று , அந்த பணத்தை குழந்தை கடத்தல் கும்பலிடம் கொடுத்து பெண் குழந்தையை விலைக்கு வாங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பதv7 logo்மினி யாரிடம் குழந்தையை விலை கொடுத்து வாங்கினார் என்பதை கண்டறியவும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *