காரைக்கால் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

புதுவையில் பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது.புதுவையில் பாரதிய ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவர்னரை திரும்ப பெறக்கோரியும் கடந்த 8-ந் தேதி புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்று காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெற்றதால் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறவில்லை. அதற்கு பதிலாக 11-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி திருநள்ளாறு ரோடு, பாரதியார் ரோடு, மாதா கோவில் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நேரு மார்க்கெட்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தது. மீன் மார்க்கெட்டும் செயல்படவில்லை.தனியார் பஸ்கள் மற்றும் புதுவை அரசு பஸ்கள் ஓடவில்லை. ஆட்டோக்கள், கார்கள், லாரிகள், வேன்களும் இயங்கவில்லை. ஒருசில தமிழக அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லைவரை வந்து சென்றன.பஸ்கள் மற்றும் வாகனங்கள் எதுவும் ஓடாததால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. முழுஅடைப்பையொட்டி இன்று காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சி ரத்து செய்யப்பட்டது.முழுஅடைப்பை யொட்டி காரைக்கால் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *