காவல்துறைக்கு புதிய தலைமை இயக்குனரை உடனடியாக நியமிக்க வேண்டும்;-டாக்டர் ராமதாஸ்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழக காவல்துறை 6 ஆண்டுகளில் 25 மாதங்கள் தலைமை இல்லாமல் இருந்துள்ள நிலையில், புதிய தலைமை இயக்குனரை உடனடியாக நியமிக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.பா.ம.க. நிறுவனர்

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–தமிழக காவல்துறைக்கு கடந்த 10 மாதங்களாக தலைமை இயக்குனர் நியமிக்கப்படாத நிலையில், இப்போதைய பொறுப்பு இயக்குனர் டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஓர் அமைப்பு திறமையாக செயல்படுவதற்கு திறமையான அதிகாரியும், போதுமான அதிகாரங்களும் அவசியமாகும்.ஆனால், தமிழக காவல்துறைக்கு தலைமையே இல்லை என்பது கேலிக்குரியதாகும். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக இருந்த அசோக் குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார். அதன்பின்னர் புதிய தலைமை இயக்குனர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரிடம் தான் அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதியதால் கடந்த 10 மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குனர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.மாறாக, இப்போதுள்ள அதிகாரிகளில் பணி அனுபவத்தில் மிகவும் இளையவர் என்று கூறப்படும் டி.கே.ராஜேந்திரன் உளவுப் பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குனர் பதவி அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவர் இம்மாதம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதனால் தமிழக காவல்துறை தலைமை இல்லாமல் மேலும் 3 மாதங்கள் செயல்பட வேண்டும்.கடந்த 6 ஆண்டுகளில் 25 மாதங்கள் தலைமை இல்லாமல் இருந்துள்ள காவல்துறைக்கு தகுதியும், திறமையும் உள்ள ஒருவரை புதிய தலைமை இயக்குனராக உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *