காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவன் விபத்தில் பலி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இரு சக்கர வாகனம் திருட முயற்சித்த குற்றத்திற்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் வெளியே சாலைக்கு ஓடிய போது டிரக் மோதி உயிரிழந்தான்.மணிகண்டன் எனும் பையன் மாதவரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவரின் இரு சக்கர வானத்தை திருட முயற்சிக்கும் போது அவரால் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். பையனை கையும் களவுமாக பிடித்த திருமுருகன் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பையனின் வயதை கருத்தில் கொண்டு திருமுருகன் தான் கொடுத்த புகாரை திரும்ப பெற்றார்.
மேலும் இது தான் மணிகண்டனின் முதல் திருட்டு என்பது தெரியவந்தது. இதனால் அந்த பையனின் தந்தை தேவராஜை காவலர்கள் போன் செய்து அழைத்தனர். தந்தை முன்னிலையில் புத்தி சொல்லி சிறுவனை அனுப்பிவிடலாம் என்று அவனது தந்தையை அழைத்திருந்தனர். காவல் நிலையத்தின் உள்ளேயே தேவராஜ், மணிகண்டனை திட்டிக்கொண்டிருந்த போது, உள்ளிருந்து வெளியே மணிகண்டன் ஓடினான். அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த டிரக் மோதி மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்தான்.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது யதார்த்தமாக நடந்த விபத்தா அல்லது தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *