காவிரியில் தண்ணீர் திறந்த கர்நாடக மந்திரிக்கு நன்றி நடிகர் விஷால் கடிதம்

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காவிரியில் தண்ணீர் திறந்த கர்நாடக மந்திரிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் கடிதம் எழுதி உள்ளார். நடிகரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தலைவருமான விஷால் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-நாம் அனைவருமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். பிறந்த இடத்திலோ, வாழும் மாநிலத்திலோ பேசும் மொழியிலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி முதல் மே 31-ந்தேதிவரை நீர்ப்பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.தமிழ்நாடு இப்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. அதன் விளைவு சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் மடிந்தனர்.வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறந்துவிடப்படும் தண்ணீர் இன்னும் திறக்கப்படவில்லையே…இந்த ஆண்டும் விவசாயம் செய்ய முடியாதோ என்று வருத்தத்தில் இருந்தனர். விவசாயிகளின் நிலையை மனதில் கொண்டே கர்நாட காவில் ஒரு பட விழாவில் பேசினேன். தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.
நேற்று நீங்கள் அடுத்த 3 மாதங்களில் 94 டிஎம்சி நீர் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் தமிழகத்துக்கு நீர் திறந்து விடுவது அவசியம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த அறிவிப்புகளுக்காக நானும் எங்கள் மாநில மக்களும் தங்களுக்கு மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். தாங்கள் செய்திருப்பது அரசியலைத் தாண்டிய மனிதாபிமான செயல். எனது வேண்டுகோளை ஏற்று சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட தங்களை நான் தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *