காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காஷ்மீர் மாநிலம் உரியில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். உரியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து இருந்ததை அடுத்து அங்கு கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.அப்போது தீவிரவாதிகள் தானியங்கி ஆயுதங்கள் மூலம் இந்திய வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தில் தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 48 மணிநேரத்தில் ஆறாவது முறையாக தீவிரவாத ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுடன், 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.maxresdefaultதீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள பாதுகாப்புப் படை, கூடுதல் வீரர்களை குவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எல்லை அருகே உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள் ஆயுதங்களை விநியோகித்து வருவதாக இந்திய பாதுகாப்புப் படையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *