கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Comments (0) இந்தியா, கலை, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை மறைக்க பார்க்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறைக்கு, உத்தரவிட்டுள்ளனர்.சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், கீழடி அகழாய்வு மூலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 5 ஆயிரத்து 300 பழம்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிராமி எழுத்துக்களுக்கான சான்றுகள் 110 ஏக்கர் அளவில் புதைந்திருக்கும் நிலையில், அகழ்வாய்வின்போது கிடைத்த பொருட்களைக் கொண்டு அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அருங்காட்சியகத்துக்குத் தேவையான இடத்தை ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ளது என்றும், தேவைப்படும் பட்சத்தில் தொல்லியல் துறைக்குத் தேவையான அனைத்து வசதிகளை செய்துதர தயாராக உள்ளதாகவும் கூறினார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகழாய்வுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்காக பெங்களூரு கொண்டு சென்று ஆய்வு நடத்தப்பட்டு, அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும், அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறையில் ஏராளனமான விதிமுறைகள் உள்ளது என்றும், குறிப்பிட்ட இடத்தில் தான் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என விதி இல்லை என்றார்.தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை மறைக்க பார்க்கிறீர்களா என மத்திய அரசின் வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முன்னோர்களின் பாரம்பரியம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், கீழடி அகழ்வாய்வின்போது கிடைத்த பழங்கால பொருட்களைக் கொண்டு, அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க தொல்லியல் துறையினருக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *