குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு – முதலமைச்சர் பழனிச்சாமி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளிக்க அதிமுக அம்மா அணி முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின், அமைச்சர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.முதலமைச்சர் குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து அறிவித்தாலும், அது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான ஜெயா பிளசில் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த அறிவிப்பில், சசிகலா மற்றும் தினகரனின் பெயர்களும் குறிப்பிடவில்லை.
downloadதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்ய வியாழனன்று எம்.பி.,எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *