குடியிருப்புப் பகுதியில் புகுந்த காட்டெருமை மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த காட்டெருமை ஒருவரை முட்டிக்கொன்றது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒரு காட்டெருமை நடமாடி வருகிறது. சனிக்கிழமையன்று காவல் நிலையத்தை ஒட்டியுள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி பொதுமக்கள் காத்திருந்த சமயத்தில் காட்டெருமை சீறிப்பாய்ந்து வந்தது. காட்டெருமையைக் கண்ட அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அப்போது, தப்பிக்க முயன்ற ராதாகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளியை காட்டெருமை முட்டித் தூக்கிவீசிவிட்டு ஓடியது. இதில் பலத்த காயமுற்ற அவர் உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *