குழந்தை வயிற்றில் குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி

Comments (0) Uncategorized

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிறந்த குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கடந்த மாதம் பிரசவத்திற்காக 19 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 20 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அக்குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை இருப்பதை அறிந்து பெரும் க்கு ஆளாகினார்கள்.அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த குழந்தை 7 செ.மீ நீளத்தில், 150 கிராம் எடையுடன் தலை மற்றும் உடல் அமைப்பு பாதியளவு உருவாகியிருந்தது.இதுபற்றி மருத்துவர்கள் கூறும்போது “இந்த பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இரட்டையர்களாக பிறக்க வேண்டியது. ஆனால் ஒரு குழந்தையின் வயிற்றில் மற்றொரு குழந்தையாக அமைந்ததால் இப்படி ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தையை ஐசியூ-வில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.தற்போது தாயும்,சேயும் நலமாக இருப்பதாகவும், விரைவில் அக்குழந்தைக்கு அதன் தாய் தாய்ப்பால் கொடுக்க உள்ளார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *