கேமரா கலைஞனாக விஜய் சேதுபதி?

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று முன்னணி நடிகர்களுள் ஒருவராய் வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் கேங்ஸ்டராக நடித்த விக்ரம் வேதா திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் சேதுபதி முதல்முறையாக த்ரிஷாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் `96′. இந்த படத்தை `பசங்க’ , `சுந்தரபான்டியன்’, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி 16 வயது இளைஞனிலிருந்து 96 வயது முதியவராக நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட

 • 1501592595
 • 1501592595a
 • vijaysethupathi-trisha-752x435
தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 01) வெளியிட்டுள்ளார்.கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான், குலுமணாலி, ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. பயணம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட லொகேஷனில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படங்களில் இப்படம்தான் அதிக லொகேஷனில் தயாராகி வருகிறது.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவாளராகவும், கோவிந்த் மேனன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டரில் விஜய் சேதுபதிக்கு அருகில் கேமரா இருப்பதால் இப்படம் கேமரா கலைஞனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *