கேளிக்கை வரி : தீர்வு எட்டப்படாத பேச்சுவார்த்தை!

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

டிக்கெட் விலையில் ஜிஎஸ்டி வரியோடு கூடுதலாக விதிக்கப்பட்ட 30 சதவீதம் மாநில வரி பற்றி முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் இரண்டாவது மற்றும் இறுதிக் கூட்டம் நேற்று (ஜூலை 24) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் உள்துறை தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளின் செயலாளர்களும் திரையுலகினர் சார்பில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் உட்பட சிலர் கலந்துகொண்டனர். இந்த இறுதிக்கூட்டத்திலும் தீர்வு ஏதும் எட்டப்படவில்லை.கூட்டத்தில் திரையுலகினர் சார்பில் கலந்து கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், “தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மூவரும் இணைந்து ஒரே குரலாக எங்களது கோரிக்கையை கூறினோம். ஒரே குரலாக சொன்னதற்கு சந்தோஷப்பட்டு, முதல்வர் வந்தவுடன் கலந்து பேசி ஜூலை 26 அல்லது ஜூலை 27-ல் நல்ல முடிவை அறிவிக்கிறோம் என்று சொன்னார்கள். சினிமா டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். விலையை டிக்கெட்டில் போட்டுதான் விற்பனையை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதனை நாங்கள் ஒப்புக் கொண்டோம். மக்களை துன்புறுத்தாதபடி டிக்கெட் விலையை வாங்க வேண்டும் என்றார்கள். திரையரங்கிற்கு வரும் அனைவரிடமும் பிரிண்ட் செய்த டிக்கெட் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். இனிமேல் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட் விலையைக் குறிப்பிட்டு, வரியைக் குறிப்பிட்டு டிக்கெட் கொடுக்கிறோம் என்று சொல்லிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற அபிராமி ராமநாதன், “இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. சாதகமான முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *