கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை : முதல்வர் அறிவிப்பு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் மூன்றாவது தேசிய கைத்தறி தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர்

  • DSC00013
  • DSC00018
கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கைத்தறித் தொழிலில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். எழுத்தாளர்களைப் போல நெசவாளர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்றார். கைத்தறி ஆடைகள் தேசப்பற்றுக்கு அடையாளமாக திகழ்கின்றன என்ற முதல்வர், விவசாயத்திற்கு அடுத்து மிகப் பெரிய தொழிலாக திகழ்வது கைத்தறித் தொழில் என குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற, ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும் என்றார். கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருவதாக கூறினார். வரும் பொங்கல் தினத்தில் தமிழகத்தில் 3 கோடியே 36 லட்சம் பேருக்கு கைத்தறி சேலைகள் மற்றும் வேட்டிகள் வாங்கப்படும் என்றார். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த முதல்வர் பழனிசாமி, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *