கொச்சி முதல் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கேரளாவின் images (1) மெட்ரோ ரயில் சேவையை இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்கிறார். கேரளாவின் கொச்சி நகரில் முதல்கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து முதல் ரயிலை இயக்கி வைப்பதுடன், அதில் பயணமும் செய்கிறார்.கொச்சியில் இருக்கும் ஜவாஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு மெட்ரோ ரயில் வர்த்தக சேவை தொடக்க விழா நடக்கவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி காலை 10.15 மணிக்கு வருகை தரவுள்ளார்.விழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, எர்ணாகுளம் எம்.பி. கே.வி. தாமஸ், மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் இத்திட்ட ஆலோசகர் இ. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *