கொச்சி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவங்கிவைத்தார் பயணம் மேற்கொண்டார்.

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொச்சி மெட்ரோ ரயில் சேவையை இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி 201706171125203627_Kerala-PM-Narendra-Modi-takes-a-ride-in-KochiMetro-with-CM_SECVPF. பின்னர் மெட்ரோ ரயிலில் சிறிது நேரம் பயணம் செய்தார். மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:- “ மேக் இன் இந்தியா திட்டத்தை ரயில் பெட்டிகள் பிரதிபலிக்கிறது. சென்னை அருகே உள்ள தொழிற்சாலைகளில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய மூலப்பொருட்கள் 70 சதவீதத்தை கொண்டு ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கொச்சி நகரில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2021-ல் 23 லட்சமாக இங்கு மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர்புற உள்கட்டமைப்புகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைப்பதற்கு இது போன்ற விரைவான போக்குவரத்து அவசியம். கொச்சி பொருளாதார வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்களிக்கும். நகரத்தின் மொத்த பொது போக்குவரத்து அமைப்பை ஒரே சிஸ்டம் கீழ் கொச்சி மெட்ரோ ஒருங்கிணைக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *