கோயம்பேடு: 729 கடைகளுக்கு சீல்!

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் 729 கடைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கோயம்பேட்டில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் சுமார் 2325 கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெரும்பாலான கடைகள் சொத்து வரி செலுத்தாமல் அலைக்களிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு சுமார் 729 கடைகள் இரண்டரை கோடி வரை சொத்து வரி செலுத்தவில்லை என அந்த கடையின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வரி செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எனவே இதனை எதிர்த்து கோயம்பேடு சந்தை கடை உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று ஜூலை-18 ஆம் தேதி நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது கோயம்பேடு சந்தையில் 2,325 கடைகளில், 1596 கடை உரிமையாளர்கள் மட்டுமே வரி செலுத்தியிருப்பதாகவும், 729 கடைகள் உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறையினர் உதவியுடன் ஜூலை 20 ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதன் அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டிய வரித்தொகையை 1998 ஆம் ஆண்டு முதல் ஏன் மாற்றியமைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசியால் ஆதாயத்துக்காக சொத்து வரி மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டிய நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *