க்யூபா ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ; டொனால்ட் டிரம்ப்

Comments (0) அரசியல், உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அமெரிக்க அதிபர் D8EB1B21-85D2-4666-B535-0568C808CC27_cx0_cy8_cw0_w1023_r1_sjpg தனக்கு முன்னால் பதவியிலிருந்த பராக் ஒபாமா க்யூபாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மீண்டும் பனிப்போர் கால மோதல் போக்கை உருவாக்கும்படியான செயல்பாடுகளில் அவர் ஈடுபடக்கூடும் என்று கருதப்படும் சூழல் உருவாகியுள்ளது.தற்போதைய க்யூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ (பிடல் காஸ்ட்ரோவின் தம்பி) தனது ராணுவத்தை வளப்படுத்த விட மாட்டேன் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் ஒபாமா ஹவானாவுக்கு விஜயம் செய்து இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு மலர வழி செய்தார்.“இந்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக க்யூபாவிற்கு சாதகமாக போடப்பட்டுள்ளது. விரைவில் புதிய கொள்கை ஒன்றை க்யூபா விஷயத்தில் அறிவிப்பேன்” என்றார் டிரம்ப்.இரு நாட்டு மக்களுக்கும் பொதுவாக நன்மைப் பயக்கும் ஒப்பந்தம் ஒன்று இடப்படும் என்றார் டிரம்ப்.டிரம்பின் இந்தச் செயலை க்யூபா விமர்சித்துள்ளது. எனினும் மரியாதைக்குரிய அளவில் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த க்யூபா விரும்புவதாக அது கூறியுள்ளது. க்யூபா தனது அரசியல் கைதிகளையும் விடுவித்து, சுதந்திரத்தை மதிக்கும் போக்கை ஏற்கும் வரை அந்நாட்டின் மீதான தடைகளை விலக்கப்போவதில்லை என்று டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் கூறினார். கம்யூனிச நாடான க்யூபாவில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை.“க்யூபாவிற்கு செல்லும் அமெரிக்க டாலர்கள் ராணுவம், பாதுகாப்பு, உளவு செயல்பாடுகளுக்கு போகிறது. அது ரவுல் அரசின் முக்கிய செயல்பாடுகளாகும். அவற்றை முடக்க வேண்டும். எனவே க்யூபாவின் சுற்றுலா திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும். பொருளாதார தடைகளும் விதிக்கப்படும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.க்யூப அரசு வட கொரியாவிற்கு ஆயுதங்களை கொடுத்துள்ளது. வெனிசூலாவில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது; அப்பாவி மக்களை சிறையிலிட்டுக் கொன்றுள்ளது. அமெரிக்க க்யூப மக்களுக்கு நேரடியாக நிதியுதவி சென்று அவர்கள் வளம் பெறுவதற்கு வழி செய்ய விரும்புகிறது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *