சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கூவத்தூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதாகக் கூறி சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கூவத்தூர் வீடியோ விவகாரத்தை எழுப்பினார். கூவத்தூரில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளைக் கொண்ட சிடி என்று கூறி சட்டப்பேரவையில் சி.டி ஒன்றை காட்டி அது தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரினார். அப்போது அவையில் அதனைக் கொடுக்க கூடாது என்று தெரிவித்த சபாநாயகர் தனபால், தனது அறையில் வந்து கொடுக்குமாறு கூறினார்.ம463833202 m k sேலும் ஸ்டாலின் கூறிய சில கருத்துக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கவும் சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *