சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு : அவைக்குறிப்பிலிருந்து நீக்கம்!

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ‘போராட்டம்’ பற்றி பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக சட்டமன்றத்தில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் மீது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிமுடித்த பிறகு இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பேசினார். இதற்கு பதிலுரை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது உரையில்,’ தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளை வைத்து போராடுவது பேஷனாகிவிட்டது’ என்று கூறினார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகியது. இதற்கு ராமதாஸ் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில், இன்று ஜூலை 8 ஆம் தேதி பேரவை தொடங்கியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளை வைத்து போராடுவது பேஷனாகிவிட்டது’ என்ற முதல்வரின் பேச்சு குறித்து விளக்கி, இதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் தனபால்,’ ஸ்டாலின் பேசியதையும், நேற்று முதலமைச்சர் எடப்பாடி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தையும்’ அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *