சமூக நீதி என்றால் என்ன என்பதை எடுத்துக் கூறியது தமிழகம்;- மீரா குமார்

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக நீதி என்றால் என்ன என்பதை பிற மாநிலங்களுக்கு எடுத்துக் கூறியது தமிழகம் என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மீராகுமார், தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சனிக்கிழமையன்று விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார். அங்கு தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்த மீரா குமார், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோரினார்.தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத்தலைவர் ராமசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய மீராகுமார், தமிழகம் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய மீரா குமார், தான் குடியரசுத் தலைவர் ஆக தேர்வானால், ஊடகத்துறை சுதந்திரமாக செயல்படும் என்றார். அனைத்து துறைகளும் வெளிப்படையோடு இயங்க வழிவகுக்கப்படும் என்றும், தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கப் போவதாகவும் மீரா குமார் உறுதியளித்தார். ஆதரவு கோரும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற மீரா குமார், அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். தமிழகத்தைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று மீரா குமார் புதுச்சேரி செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *