சர்க்கரை இறக்குமதி வரி உயர்ந்தது!

Comments (0) செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உள்நாட்டுச் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 50 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீதான வரி 40 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’கடந்த ஜூன் மாதம் சர்க்கரை இறக்குமதி வரி 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அந்த வரி 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் பொது இயக்குநர் அபினேஷ் வர்மா கூறும்போது, “மத்திய அரசின் இந்த முடிவால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். மேலும், இனி இறக்குமதி செய்யப்படும் சர்க்கரையின் அளவு குறையும். இதனால் உள்நாட்டுச் சர்க்கரை தொழில்துறை பயனடையும்” என்றார்.மேலும், கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் சர்க்கரை விற்பனையின் சில்லறை விலை பெரியளவில் மாற்றமின்றி நிலையாக இருந்தது. மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியாய விலையை 11 சதவிகிதம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு தற்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் இந்திய கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *