சர்வைவா’ அடுத்த புயல் ‘தலை, விடுதலை’

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

விவேகம் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சர்வைவா’ ரிலீஸாகி ஒரு புயல்போல சமூக வலைதளங்களையும், அஜித்தின் ரசிகர்களையும் கடந்துசென்றுவிட்டது. அடுத்த புயல் ‘தலை, விடுதலை’ என்ற பெயரில்நா ளை(09.07.17) இரவு 12 மணி முதல் சமூக வலைதளங்களை தாக்குகிறது.10ஆம் தேதியைத் தனக்கு ராசியான தினமாகக் கருதும் விவேகம் திரைப்படத்தின் இயக்குநர் சிவா, விவேகம் திரைப்படத்தின் அடுத்த பாடலை 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இப்போது அந்தப்பாடலின் டைட்டிலை அறிவித்து, அதன்மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரிக்கச் செய்திருக்கிறார்.ஊக்கமளிக்கும் வகையில் பாடல்களை அமைப்பது அஜித் படங்களுக்குப் புதிதல்ல. ஆனால், சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்திலுமே உழைப்பு ஒன்றையே பிரதானமாக வைத்து பாடல்கள் இடம்பெறும். அதிலும் அஜித்தின் புகழ் பாடும் பாடல்கள் அதிகமாக இருக்கும்.விவேகம் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியான சர்வைவா கூட ஒரு மனிதனின் பழிவாங்கலையும், அதற்கு அவன் செலவிடும் உழைப்பைப்பற்றியும் பேசும் பாடலாகவே அமைந்தது. இந்த சமயத்தில் வெளியாகவிருக்கும் தலை, விடுதலை பாடல் எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு எகிறியிருப்பது ஆச்சர்யமில்லை.அதேசமயம், தனது திரைப்படங்களில் தல என்ற அஜித்தின் பட்டப்பெயரைப் பயன்படுத்துவதை அஜித் தவிர்த்துவந்தார்.இந்நிலையில், தலை விடுதலை என பாடல் வரிகளை வைத்து அஜித் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணங்களே கொடுக்காமல் இந்தப்பாடலை எழுதியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *