சல்மா அணைக்கு அருகே தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்தியா – ஆப்கானிஸ்தான் நட்புறவின் நினைவாக கட்டப்பட்ட சல்மா அணையை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர் 10 பேர் உயிரிழந்தனர்.ஹெராத் மாகாணம், செஸ்ட் ((Chesht district)) மாவட்டத்தில் சல்மா அணை அமைந்துள்ளது. ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அணைக்கு இந்தியா நிதி உதவி வழங்கியதுடன், பிரதமர் மோடி கடந்த ஆண்டில் இந்த அணையை திறந்து வைத்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அங்கு புகுந்த தலிபான் தீவிரவாதிகள் காவல்துறையினரின் சோதனைச் சாவடிகளை தகர்த்ததுடன், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் காவல்துறையினரில் 10 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையினர் பதிலுக்கு சுட்டதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து அணைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *