சான்றிதழ் தர மறுக்கும் சென்சார்!

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

திரைப்படங்களுக்கான சென்சார் சான்றிதழ் பெறுவதில் திரைப்பட இயக்குநர்களுக்கும் சென்சார் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் கருத்து வேற்றுமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துவந்தாலும் தற்போது அது அதிகரித்துள்ளது. சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாக காட்சிகள் வைக்கிறோம், ஒரு படைப்பாளிக்கு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என இயக்குநர்கள் தரப்பிலும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் காட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என தணிக்கை குழு தரப்பிலும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் தணிக்கை குழு சென்னையில் A சான்றிதழ் வழங்கும் படங்கள் மும்பை சென்று தணிக்கை செய்தால் U/A சான்றிதழ் வழங்கப்படுவதும் நடைபெறுகிறது. அந்தந்த குழுவில் உள்ளவர்களுக்கு ஏற்ப மாறுகிறது. சமீபத்தில் இயக்குநர் ராமின் தரமணி திரைப்படம் A சான்றிதழ் பெற்றது. அது குறித்து கூறும்போது சென்சார் போர்டு வலதுசாரி தன்மையுடன் செயல்படுவதாக தெரிவித்தார். தரமணி படத்துக்கேனும் A சான்றிதழ் கொடுத்தவர்கள் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்துக்கு எந்த சான்றிதழும் வழங்கமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.
திலகர் படத்தின் கதாநாயகன் துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ஜே.டி.சக்ரவர்த்தி நடித்துள்ள படம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன. படம் குறித்து அதன் இயக்குனர் ராகேஷ் கூறும்போது, “சமூகத்தில் நடக்கும் சின்னச்சின்ன குற்றங்களை மையப்படுத்திய கதை இது. தினந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நடந்து வருகிறது. அதை செய்தியாகப் படிக்கிறோம். டி.வியில் பார்க்கிறோம். சமூக வலைத்தளங்களில் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அதில் சென்சார் தலையிடுவதில்லை. இதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா, இல்லையா என்று யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால், அதையே மக்களுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக எடுத்தால், பிரம்பைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்சார். நான் சொன்ன கதை இங்கு நடக்கவில்லை என்றோ, அவை சமூக வலைத்தளங்களில் வலம் வரவில்லை என்றோ சென்சார் அதிகாரிகளால் மறுக்க முடியவில்லை. ஆனால், எந்த சான்றிதழும் கொடுக்க முடியாது என்கிறார்கள். படத்தைப் பார்ப்பதற்கே ஒரு மாதம் இழுத்தடிக்கும் அவர்களிடம், ஸ்கிரிப்ட் கொடுத்து படிக்கச் சொல்லி ஓகே வாங்கி படத்தை உருவாக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *