சிகிச்சை மறுப்பு: மருத்துவமனை மீது வழக்கு

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மருத்துவ அலட்சியத்தால் தொடர்ந்து உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ சிகிச்சை மறுப்பு காரணமாக கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 7 மணி நேர அலைக்கழிப்புக்குப் பிறகு ஆம்புலன்ஸில் மரணத்தைச் சந்தித்த சம்பவம் வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்களை எந்தவித விசாரணையுமின்றி உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கும் நிலையில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்(30) என்பவர் கொல்லம் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இவர், சாத்தனூர் என்ற இடத்தில் நேற்று( ஆகஸ்ட் 7) இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் கேரள மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிர் காக்கும் உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டில் இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, முருகனை மெடிசிட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மெடிட்ரைனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கும் உயிர் காக்கும் உபகரணங்கள் இல்லை மற்றும் முருகனுடன் துணைக்கு யாரும் இல்லை என்று கூறி சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து, அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவசர சிகிச்சை அறை காலியாக இல்லை மற்றும் வெண்டிலெட்டர் வசதி இல்லை , அதனால் சிகிச்சை அளிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.விபத்தில் பலத்த காயமடைந்த முருகன் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். இதையடுத்து, மீண்டும் கொல்லம் நகருக்கு ஆம்புன்ஸில் கொண்டுவரப்பட்ட முருகன் இன்று( ஆகஸ்ட் 8) காலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் ஒட்டுநர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் ஒட்டுநர் அளித்த புகார் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த இரண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிலவிய குறைபாட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவறான முன்னுதாரணம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *