சிறுதீனி தயாரிப்பாளர் சங்கம் 5% ஜி எஸ் டி வரி விதிக்க கோரிக்கை

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜி எஸ் டி குழு விதித்துள்ள 12 சதவீத வரியிலிருந்து 5 சதவீதமாக குறைக்க சிறுதீனி தயாரிப்பாளர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.இந்த அமைப்பின் அஜித் மோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்திய பாரம்பரிய தீனி வகைக்களான நம்கீன், காரவகைகள், உருளை வறுவல், வாழை வறுவல் ஆகியவற்றிற்கு 12 சதவீத ஜி எஸ் டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறைக்கப்பட்டு இனிப்பு வகைகளுக்கு விதிகப்பட்டுள்ள 5 சதவீத வரிக்கு இணையாக வைக்கப்பட வேண்டும். குறிப்பாக நம்கீன் வகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி இப்போதுள்ள வரியிலிருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.கச்சாப் பொருட்களான உருளை, வாழை, மைதா, உப்பு இவற்றின் மீது வரிகள் ஏதுமில்லை. மசாலாவின் மீது சிறிதளவு வரி மட்டுமேயுண்டு. இந்த 12 சதவீத வரியினால் அனைத்து பொருட்களின் விலையும் 6 முதல் 8 சதவீதம் வரை உயரும் என்று மோடா கூறினார்,இத20-1434786806-2popularindianproductsbannedabroad்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் சிறுதொழில் செய்பவர்கள். ஏராளமான தொழிலாளர்களும் இத்தொழிலை நம்பியுள்ளனர். இத்தொழில் 12 சதவீத வரியை தாங்காது. இதனால் பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும். மேலும் சூடான இனிப்பு வகைகளான ஜிலேபி போன்றவற்றிற்கு வரி சதவீதம் அறிவிக்கப்படவில்லை என்பதும், ஏசி உணவகங்களில் சூடான இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டால் அவை 18 வரியை எதிர்கொள்ளும் என்பதும் குழப்பமாகவுள்ளது என்றார் மோட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *