சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரம், கல்வித்துறையில் தனிக்கவனம் செலுத்தப்படும் புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் லதா பேட்டி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் தனிக்கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் லதா கூறினார்.சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி, தமிழக உள்துறையில் மதுவிலக்கு ஆயதீர்வு துணை செயலாளராக மாற்றப்பட்டார். சென்னையில் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனராக இருந்த லதா, சிவகங்கை மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதன்படி புதிய கலெக்டராக லதா நேற்று பொறுப்பேற்றார். அப்போது கலெக்டர் மலர்விழி பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்ற லதாவுக்கு, மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, மாவட்ட திட்ட அதிகாரி காஞ்சனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பையா, சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் புதிய கலெக்டர் லதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். சிவகங்கை மாவட்டத்தை நீர் மேலாண்மையில் சிறந்த மாவட்டமாக மாற்ற முன்னுரிமை கொடுக்கப்படும். வேளாண்மை, சுகாதாரம் மற்றும் கல்வி துறைகளில் தனிக்கவனம் செலுத்தி மாவட்டத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து ஒரே குழுவாக செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். என்று அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற லதா காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 1998–ம் ஆண்டு துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற அவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் உதவி கலெக்டராக தேர்வு பெற்று திருவள்ளூரிலேயே உதவி கலெக்டராக பணியாற்றினார். தொடர்ந்து பொன்னேரி உதவி கலெக்டராகவும், பின்னர் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாகவும் பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி, சென்னையில் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தற்போது சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.பின்னர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் இளங்கோ உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் சார்பில் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, பஸ் இயக்க கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் லதா உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *