சீராய்வு மனுவில் நீதி கிடைக்கும், சசிகலா மீண்டு வருவார்ந-டராஜன்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சொத்து குவிப்பு வழக்கின் சீராய்வு மனுவில் நீதி கிடைக்கும். எனது மனைவி சசிகலா சிறையில் இருந்து மீண்டு வருவார் என அவரது கணவர் நடராஜன் தெரிவித்துள்ளாஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைவராக வருவதற்கு நாங்கள்தான் பின்னணியில் இருந்தோம். 1980-ம் ஆண்டுவாக்கில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் நாங்கள் அவருக்கு உதவியாக செயல்பட்டோம்.எம்.ஜி.ஆர். இறந்த போது, அந்த தகவலை கூட ஜெயலலிதாவுக்கு யாரும் தெரிவிக்கவில்லை. நான்தான் என் மனைவி சசிகலாவையும், தினகரனையும் அதிகாலை 5 மணிக்கு ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பி தகவலை சொல்ல சொன்னேன். மேலும் அவரை அழைத்து வந்து எம்.ஜி.ஆர். உடல் அருகே நிற்க வைத்தோம். அவர் பீரங்கி வண்டியில் ஏறிய போது, கீழே தள்ளி விட்டார்கள். சசிகலாதான் அவரை தாங்கி பிடித்தார்.ஜெயலலிதா சபாநாயகருக்கு எழுதி வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை கருணாநிதி அரசு கைப்பற்றியது. பின்னர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.அந்த நேரத்தில் தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசக்கூடாது என்று என்னிடம் ஜெயலலிதா கூறினார். நான் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவன். எனவே, நான் வெளியேறி விட்டேன். சசிகலா தொடர்ந்து அங்கு இருந்தார்.இந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு எதிராக செயல்படுவதாக போலீசார் கொடுத்த அறிக்கையை நம்பி ஜெயலலிதா 2011-ல் கட்சியை விட்டு எங்கள் குடும்பத்தினரை நீக்கினார். அதனால் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்படவில்லை.
ஜெயலலிதாவிடம் எங்களுக்கு கிடைத்த அறிமுகத்துக்கு பிறகு நான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இது சம்பந்தமாக நான் எழுதும் சுயசரிதை புத்தகத்தில் எல்லா தகவலையும் வெளியிட இருக்கிறேன்.டைசியில் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய போது, ஜெயலலிதா தனது முதல்- அமைச்சர் பதவியை கூட ராஜினாமா செய்ய போவதாக கூறினார். எங்கள் குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு ராக்கெட்டின் உந்து சக்திபோல் செயல்பட்டு உதவி வந்தோம்.எம்.ஜி.ஆர். மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு இளைஞரான ஜெயலலிதா வேண்டுமா? வயதான ஜானகி வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த போது, ஜெயலலிதாவை கட்சியினர் தேர்வு செய்ததற்கு நான் கருவியாக இருந்தேன்.2011 தேர்தலின் போது கூட தேர்தல் அறிக்கையை நான்தான் எனது வீட்டில் இருந்து தயாரித்தேன். இலவச ஆடு- மாடு, சூரிய சக்தி வீடுகள், மாணவர்களுக்கு லேப்-டாப் போன்ற திட்டங்களை அதில் இடம்பெற செய்தேன்.எடப்பாடி பழனிச்சாமி- ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்னும் ஒரு வாரத்தில் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன்.ஊழல் வழக்கில் எனது மனைவியும், குடும்பத்தினரும் தவறான முறையில் தண்டனை பெற்றுள்ளனர். இது சம்பந்தமான சீராய்வு மனுவில் அவர்களுக்கு நீதி கிடைக்கும். அவர்கள் மீண்டு வருவார்கள்.சாதாரண மனிதர்களாலும் ஆட்சிக்கு வர முடியும், வரலாற்றை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக அறிஞர் அண்ணாதுரை, நரேந்திர மோடி உள்ளனர்.இவ201706111151080595_sk._L_styvpf்வாறு நடராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *