சுசீந்திரனின் ஆதலால் காதல் செய்வீர் -2 ?

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயக்குநர் சுசீந்திரன் `மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து அண்மையில் `அறம் செய்து பழகு’ படத்தை இயக்கவுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அன்னை பிலிம்ஸ் பாக்டரி தயாரிக்கும் அந்த திரைப்படத்தில் விக்ராந்த், மேஹரீன் பிர்ஜாடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் அதன்பிறகு இளமை ஊஞ்சல் ஆடுகிறது என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை அவர் இயக்கிவருவதாக தகவல் வெளியாகியது.இதுகுறித்து ஏற்கனவே நமது மின்னம்பலத்தில் ரஜினி கமல் தலைப்பில் சுசீந்தரன் என்ற செய்தியில் பதிவு செய்திருந்தோம். தற்போது அந்த தகவலை சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் படத்தின் பெயரை மட்டும் அவர் வெளியிடவில்லை. அவரது டிவிட்டர் பதிவில்,“அறம் செய்து பழகு” திரைப்படத்தை அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” போல் முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம். இம்மாத இறுதியில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.ஆதலால் காதல் செய்வீர் படத்தில் இப்போதுள்ள இளம் தலைமுறையின் காதல், அது சந்திக்கும் பிரச்சனைகள் அதனால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளை அப்பட்டமாக பேசியிருப்பார். இந்த கல்லூரி மாணவர்கள் பற்றிய கதையாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுசீந்திரனின் பதிவின் மூலம் அது ஆதலால் காதல் செய்வீர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *