சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல் அளிக்கும் டுவிட்டர் பக்கம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் புதிய டுவிட்டர் பக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை நேரங்களில் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையைப் போக்கி வாகன ஓட்டிகளின் நேர விரயத்தை தவிர்க்கும்வகையில், சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய டுவிட்டர் பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.சென்னை டிராபிக் அலர்ட் என்ற அந்த டுவிட்டர் பக்கத்தில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகள் குறித்து உடனுக்குடன் தகவல்கள் பதிவிடப்படும். நெரிசலின் அளவு குறித்தும், மாற்றுப்பாதைகளில் செல்வது குறித்த அறிவுரைகளும் அதில் அளிக்கப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகளின் நேர விரயம் தவிர்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *