சென்னையில் வர்ண பகவான் உபயம் – பல இடங்களில் கனமழை

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சென்னையின் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது.வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் முழுவதும் பல பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இன்று சேலம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சில மணிநேரம் கனமழை பெய்தது.இதேபோன்று, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்துவருகிறது.இதற்கிடையே, தலைநகர் சென்னையில் பரவலான இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *