சென்னை. கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ. 772 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை

 • DSC00023
 • DSC00012
 • DSC00015
சார்பில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை பயிற்சி முகாம் தொடக்கவிழா மற்றும் கருத்தரங்கம் அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் 24 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 2020-ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முதல்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் 372 கோடியும், தமிழக அரசு சார்பில் 400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 நகரங்களில் மதுரை, தஞ்சை, சேலம், வேலூர் மாநகராட்சிகளுக்கு 868 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, தடையில்லா குடிநீர், கழிவுநீர் வடிகால் திட்டம், தகவல் தொடர்பு தொழில் நுட்ப மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல், மாற்றுத்திறனாளிகள் நடைப்பாதை திட்டம், சூரிய மின் உற்பத்தி திட்டம் ஆகியவை முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *