சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின்போது, பலியானவரின் குடும்பத்திற்கு நிதி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணியின்போது, இடிபாடுகள் சரிந்து விழுந்து, ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என சென்னை சில்க்ஸ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில், 7 மாடிகளை கொண்ட தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 30 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பிடித்து எரிந்த நிலையில், அடுத்த நாள் ஜூன் ஒன்றாம் தேதி பிற்பகலில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்று மாலையே கட்டடத்தை இடிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கின.ராட்சத இயந்திரமான ஜா கட்டர் வரவழைக்கப்பட்டு, கட்டடத்தை இடிக்கும் பணிகள் 9ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், பிற்பகல் 3.45 மணியளவில், கட்டட இடிப்பு பணியின்போது, இடிபாடுகள் சரிந்து ஜா கட்டர் இயந்திரத்தின் மீது திடீரென விழுந்தது. இந்த விபத்தில், ஜா கட்டர் மெஷின் ஆப்ரேட்டர் சரத்குமார் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் பலியான சரத்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டியைச் சேர்ந்தவர். சரத்குமாரின் உடல், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் திருவண்ணமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக மாம்பலம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தீப்பிடித்து எரிந்ததில் உருக்குலைந்த தி சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டடத்தை இடிக்கும் பணியில், தமிழக அரசு உத்தரவின்படி பர்வீன் என்ற தனியார் கம்பெனி ஈடுபட்டுள்ளது. 4 ஜா கட்டர்கள் உதவியுடன் கட்டட இடிப்பு பணி நடைபெற்று வந்தது. பிற்பகலில் நடந்த விபத்திற்கு பின்னர், கட்டட இடிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதdownload (1)ற்கிடையே, சம்பவம் குறித்து சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்டட இடிப்பு பணியின்போது உயிரிழந்த சரத்குமாரின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்த தொகை, கட்டட இடிப்பு காண்ட்ராக்டர் துரை மூலமாக வழங்கப்படும் என்றும் ரவீந்திரன் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *