சென்னை திரும்பினார் வைகோ- இலங்கை மீது குற்றச்சாட்டு

Comments (0) அரசியல், உலகம், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று இரவு 11-30 மணி அளவில் திரும்பினார். சென்னை விமானநிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தம்மை மலேசிய விமானநிலையத்தில் அதிகாரிகள் எங்கும் நகர விடாமல் ஒரு சிறை கைதியை போல நடத்தினர் என கூறினார். தாம் அங்கு சென்று இறங்கிய பின்னர் உணவு எதுவும் எடுத்து கொள்ளவில்லை என்றார். அவருடன் சென்ற செயலரும் உணவு உட்கொள்ளவில்லை என்றார் வைகோ. தாம் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் ராமசாமியின் இல்ல மணவிழாவுக்கு சென்றதாகவும் , அங்கு விமானநிலைய அதிகாரிகள் தமது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்து விட்டு தமது பெயர் பிளாக் லிஸ்டில் இருப்பதாக தெரிவித்து தம்மை அனுமதிக்காமல் பாஸ்போர்ட்டையும் பிடுங்கி வைத்துக்கொண்டார்கள் என் தெரிவித்தார். இது தமக்கு பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். உலகில் விடுதலை புலிகளின் குரல் எழக்கூடாது என இல்ங்கை அரசின் நடவடிக்கையால்தான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும் , மலேசிய அரசு இதுபோல நடந்து கொள்வது மிகவும் கண்ண்டனத்துக்கு உரியது என்றும் வைகோ தெரிவித்தார். தமக்கு அனைத்து தமிழக தலைவர்களும் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் மகிழ்வை தருவதாக வைகோ தெரிவித்தார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ்தலைவர் திருநாவுக்கரசர் , தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். vaikoo_02802188669_81350633cd_b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *