ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்; அனைத்து கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் முடிவு: அமித் ஷா

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கூறியுள்ளார்.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் ஜூலை இறுதியில் முடிவடைவதனை அடுத்து புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் வருகிற ஜூலை 17ந்தேதி நடைபெற உள்ளது. ஜூலை 20ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மத்திய அரசோ அல்லது எதிர்க்கட்சியோ இன்னும் அறிவிக்கவில்லை.இந்த நிலையில், வேட்பாளராக சுஷ்மா சுவராஜ் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவித்துள்ள சுவராஜ், வெளிவிவகார துறை மந்திரியாக நான் பதவி வகிக்கிறேன். நீங்கள் உள்நாட்டு விவகாரம் பற்றி கேட்கின்றீர்கள் என பதிலளித்துள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை அனைத்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒரு முடிவு எடுக்கப்படும் என பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று கூறியுள்ளார்download (7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *